நாட்டு நாட்டு’க்கு பாட்டுக்கு வீதியில் நடனமாடிய அமெரிக்க பொலீசார்!
ஆஸ்கார் விருது பெற்ற ‘நாட்டு நாட்டு’க்கு பாட்டுக்கு அமெரிக்க பொலீசார் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது
ஆஸ்கர் விருதுக்கு மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து 3 பிரிவுகளில் படங்கள் தேர்வானது. சிறந்த பாடலுக்காக ஆர்ஆர்ஆர் படத்தில் இடம் பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது. இதற்கான விருதை பாடலாசிரியர் சந்திரபோஸூம், இசையமைப்பாளர் கீரவாணியும் பெற்றுக் கொண்டார்கள்.
நடனமாடிய அமெரிக்க பொலீசார்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஆஸ்கார் விருதுக்கு மத்தியில் ‘நாட்டு நாட்டு’க்கு பாட்டுக்கு சாலையில் அமெரிக்க காவல் துறையினர் நடனமாடுகின்றனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.
