Local

நாட்டை ஆட்சி செய்வது அரிசி ஆலை உரிமையாளர்களா?

நாட்டை ஆட்சி செய்வது அமைச்சரவையா அல்லது அரிசி ஆலை உரிமையாளர்களா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்திருக் கின்றது. இது தொடர்பில் அரசாங்கம் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாட்டை யார் ஆட்சி செய்கின்றனர் என்பதை அரசாங்கத்திடம் கேட்கின்றேன். ஏனெனில், அரிசி ஆலை உரிமையாளர்கள் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி அரிசி விலை தொடர்பாக நாட்டுக்கு அறிவித்திருக் கின்றனர்.

இவ்வாறான நிலையில் இது தொடர்பில் அரசாங்கம் எதனையும் தெரிவிக்காமல் இருக்கின்றது. மக்களும் அரசாங்கத்தின் பதிலொன்றை எதிர்பார்க்கின்றனர். நாட்டை நிர்வகிப்பது யார் என்ற கேள்வியை மக்களும் கேட்கின்றனர் என ரணில் தெரிவித்தார்.

நாட்டை ஆட்சி செய்வது அமைச்சரவையா அல்லது அரிசி ஆலை உரிமையாளர்களா என்ற கேள்வி அனைவருக்கும் எழுகின்றது. அதனால் அரசாங்கம் இது தொடர்பாக நாட்டுக்கு அறிவிக்க வேண்டும் என ரணில் தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன, முன்னாள் பிரதமர் சபை சம்பிரதாயத்துக்கு மாறாகக் கேள்வி கேட்கின்றார். அவ்வாறான கேள்விக்கு இட மளிக்க முடியாது என்றும் வேறு ஒரு தினத்தில் அதனைக் கேட்கலாம் என்றும் குறிபிட்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading