Local

நாட்டை இரு வாரங்களுக்கு முடக்க கோரிக்கை!

தற்போதைய கொரோனா தொற்று பரவலில் இருந்து நாட்டை காப்பாற்ற அரசாங்கம் குறைந்தது இரு வாரங்களுக்கு நாட்டை மூட வேண்டும் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி ,கொரோனா விரிவாக்கத்தின் போது கடந்த காலத்தில் செய்ய வேண்டியவற்றில் பெரும்பாலானவற்றை அரசாங்கம் செய்ய தவறியதால் நாடு இன்று மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக அதன் தலைவர் டாக்டர் ருக்ஷன் பெல்லன தெரிவித்தார்.

இதன்படி ,ஆரம்பத்தில் இருந்தே இது தொடர்பாக தனது சங்கம் எச்சரிக்கைகளை விடுத்திருந்தாலும், அதை புறக்கணிக்கும் தற்போதைய சூழ்நிலையில் நாடு விழுந்துவிட்டது என்று தெரிவித்தார்.

மேலும் ,நாட்டை மூடுவது பொருளாதார சிக்கலை ஏற்படுத்தும் என்று தெரிவித்த அவர், ஆனால் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு நாடு மூடப்படாவிட்டால், பொருளாதார சேதத்தினை விட மிகவும் கடுமையானதாக இருக்கும் என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading