நாட்டை முடக்குவதால் ஏற்படும் ஆபத்து!

ஒன்றரை வருடத்துக்கு மேலாக கோவிட் தாக்கத்தால் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம். இதன் காரணமாக எமது பொருளாதாரத்தை வீழ்ச்சி அடைய வைக்க முடியாது என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம் பாதிக்கும் ஆனால் முதலாவது பாதிக்கப்படுவது பொதுமக்கள் ஆகவே மக்களை பாதிக்க விட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மிக விரைவில் நாட்டை திறக்க வேண்டும் திறந்தால்தான் மக்களுடைய வாழ்வாதாரமும் பொருளாதாரமும் உயர்வடையும்.
அரசாங்கம் சில இடங்களை தனிமைப்படுத்தினால் மக்கள் ஒத்துழைப்பு வழங்குவதுடன் அவர்கள் தெளிவடைய வேண்டும் . தொற்று அதிகரித்தால் நாங்கள் தான் பொறுப்பாளி.
சுகாதார நடைமுறையைப் பேணாமல் வீதியோரங்களில் சுற்றி அலைந்தால் கோவிட் தொற்று விகிதத்தை நிறுத்த முடியாது.
ஆகவே மக்களும் தங்களுடைய பொருளாதாரத்தை வளர்ப்பதற்கு முயற்சி எடுக்கவேண்டும். முயற்சி எடுக்காத பட்சத்தில் நாங்கள் இந்த வீழ்ச்சியில் இருந்து மீள முடியாத ஒரு நிலை உருவாகத் தான் வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
