Local

நாட்டை விட்டு வெளியேறினார் கோட்டா சபாநாயகர் தெரிவிப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இந்த தகவலை வழங்கியுள்ளார்.

எதிர்வரும் புதன்கிழமை பதவி விலகுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவித்திருந்தார்.

இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக அவர் வெளிநாடு ஒன்றுக்கு சென்றுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

இதனை உறுதிப்படுத்திய சபாநாயகர், எதிர்வரும் புதன்கிழமை மீண்டும் ஜனாதிபதி கோட்டாபய மீண்டும் நாடு திரும்புவார் எனத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை அது உச்சம் கண்டிருந்தது.

இதன்போது ஜனாதிபதி மாளிகை மற்றும் செயலகம் என்பன மக்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading