Local

நான்கு அமைச்சர்களில் ஏற்படவுள்ள திடீர் மாற்றங்கள்!

நான்கு அமைச்சுக்களில் மட்டும் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சரவை அந்தஸ்துடைய நான்கு அமைச்சர்களின் பதவிகளில் மட்டும் மாற்றம் செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், தினேஸ் குணவர்தன, டலஸ் அழப்பெரும மற்றும் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரின் அமைச்சுக்களில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன கல்வி அமைச்சராகவும், தற்போதைய கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும்,மின்சக்தி அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும், ஊடக அமைச்சராக டலஸ் அழப்பெருமவும் நியமிக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சுக்களில் மாற்றமானது எதிர்வரும் 17ம் திகதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading