World

நான்கு முறை தடுப்பூசி போட்ட பெண்ணுக்கு கொரோனா!

மத்தியப் பிரதேசத்தில் இருந்து துபாய் செல்வதற்காக ஏர் இந்தியா விமானத்தில் கடந்த செவ்வாயன்று பெண் ஒருவர் செல்ல இருந்தார். விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக அவர் விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டார். மருத்துவமனையில் ெகாரொனா பிரிவில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகின்றார்.

விசாரணையில் அவர், உறவினர் திருமணத்துக்காக துபாயில் இருந்து 12 நாட்களுக்கு முன் இந்தூர் வந்துள்ளார். செவ்வாயன்று மீண்டும் துபாய் திரும்ப முயன்றபோது கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த பெண், வெவ்வேறு நாடுகளில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதத்துக்குள் 4 கொரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ளார். சினோபார்ம், பைசர் தடுப்பூசிளையும் செலுத்திக் கொண்டுள்ளார். அப்படி இருந்தும் கொரோனாவால் இவர் பாதிக்கப்பட்டு இருப்பது ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading