Cinema

நான் முஸ்லிம் மனைவி இந்து பிள்ளைகள் இந்தியர்கள்

மும்பை: நான் முஸ்லிம், என் மனைவி இந்து; என் பிள்ளைகள் இந்தியர்கள் என்று தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பேசியுள்ளார்.
மும்பையில் தொலைக்காட்சி ஒன்றில் ‘டான்ஸ் ப்ளஸ் 5’ என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கலந்து கொண்டார். அப்போது அவர் சில கேள்விகளுக்கு பதிலளித்து பேசியதாவது: நாங்கள் வீட்டில் எப்போதுமே இந்து – முஸ்லிம் பிரச்சினை பற்றிப் பேசியதே இல்லை. ஏனென்றால் என் மனைவி இந்து. நான் முஸ்லிம். என் குழந்தைகள் இந்தியர்கள்.என் மகள் ஒருமுறை என்னிடம் அவளது பள்ளி படிவங்களில் மதம் குறித்த கேள்விக்கு பதிலளிப்பதற்காக மதம் குறித்து என்னிடம் கேட்டாள். அப்போது அவளிடம், ‘நாம் எந்த மதத்தை சேர்ந்தவர்களும் இல்லை. நாம் அனைவரும் இந்தியர்கள்’ என நான் எளிமையாக அந்தப் படிவத்தில் எழுதினேன்.இஸ்லாமிய மத கடமைகளின்படி நான் தினமும் ஐந்து முறை தொழுகை செய்வதில்லை. ஆனால் நான் இஸ்லாமியன். நான் இஸ்லாத்தின் கொள்கைகளை நம்புகிறேன். அது ஒரு நல்ல மதம் மற்றும் அதில் நல்ல ஒழுக்கம் உள்ளது என்று நான் நம்புகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading