Local

நாமலை பிரதமராக்க முயற்சி?

காலிமுகத்திடலில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களை அடிப்படையாக வைத்து நாமல் ராஜபக்சவை பிரதமராக்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என லீடர் செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தின் உள்ளக தரப்புகள் இதனை தெரிவித்துள்ளன.

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்ட சிலர் நாமல் ராஜபக்சவை பிரதமராக்கவேண்டும் என தெரிவித்ததை பயன்படுத்துமாறு பிரதமர் அலுவலகத்தின் ஊடாக செயற்படும் சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் கேட்டு;க்கொள்ளப்பட்டுள்ளனர் என தகவலகள் வெளியாகியுள்ளன.

காலிமுகத்திடலில் உள்ள சமூக ஊடக செயற்பாட்டாளர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணுமாறு பிரதமர் அலுவலகத்தின் ஊடகப்பிரிவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading