Local

நாமல் உட்பட மொட்டு கட்சியின் பலருக்கு அமைச்சர் பதவி?

எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் மேலும் சில சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம்.சந்திரசேன, எஸ்.பி.திஸாநாயக்க, சி.பி.ரத்நாயக்க, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகிய முன்னாள் அமைச்சர்களில் நால்வருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரான திரு வஜிர அபேவர்தனவுக்கு அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading