Cinema

நாய்களுக்கு குரல் கொடுத்த முன்னணி நடிகர்கள்!

செல்ல நாய்கள் இணைந்து சாகசப் பயணத்தில் ஈடுபடும் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம், ‘வளட்டி – ஏ டேல் ஆஃப் டெயில்ஸ்’. இதில் மலையாள நடிகர்கள் ரோஷன் மேத்யூ, சவுபின் ஷாஹிர், இந்திரன்ஸ், சன்னி வெய்ன், சைஜு குருப் உட்பட பல முன்னணி நடிகர்கள், நாய் கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்துள்ளனர்.

ஃபிரைடே பிலிம் ஹவுஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை கே.ஆர்.ஜி ஸ்டுடியோஸ் கார்த்திக் கவுடா வெளியிடுகிறார்.

கார்த்திக் கவுடா கூறும்போது, “புதுமையான கதைசொல்லல் மூலம் அனைவரையும் ஈர்க்கும் படம் இது. அறிமுக இயக்குநர் தேவன் இயக்கியுள்ளார். ஜூலை 14-ம் தேதி மலையாளத்தில் வெளியாகிறது. ஒரு வாரம் கழித்து கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகும். தில் ராஜு தெலுங்கில் இந்தப் படத்தை வழங்குகிறார். அனில் ததானி இந்தியில் விநியோகம் செய்கிறார்” என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading