World

நாய் முகத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வ வௌவால்!

நாய் முகத்துடன் உள்ள  வௌவால் ஒன்றின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.ட்விட்டர்வாசிகள் வியப்புடனும் ஆச்சர்யத்துடனும் வௌவால் புகைப்படத்தை  பகிர்ந்து வருகின்றனர். புகைப்படத்தைப் பார்த்தாலே, ‘நாயா, வௌவாலா அல்லது இறக்கை முளைத்த  நாயா அல்லது நாய் – வௌவாலா’ என்ற குழப்பம் ஏற்பட்டு விடுகிறது. கச்சிதமாக, நாய் முகத்துடன் இருக்கிறது அந்த வௌவால்.
இந்தப் புகைப்படத்தை கைலோ (@emotionaolpedant) என்பவர் ட்விட்டரில் பகிர்ந்து உள்ளார். ப “இதுவரை பல வித்தியாசமான வௌவால் படங்களைப் பதிவிட்டிருக்கிறோம். அந்த வகையில், பட்டிகோஃபர் எபலெட்டெட்(Buettikofer’s epauletted) குடும்பத்தைச் சேர்ந்த பழந்தின்னி வௌவாலான இது நாய் முகத்துடன்பறந்து கொண்டிருக்கிறது ” என்று தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை 23,300 பேருக்கும் மேல் இந்த புகைப்படத்தை லைக் செய்திருக்கிறார்கள். 5,400 பேர் ரீடிவீட் செய்திருக்கிறார்கள். பலரும் இது போன்ற வித்தியாசமான புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர். இந்த,  வகை வௌவால் இனங்கள் தென் ஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதிகளில் வசிக்கின்றன. குறிப்பாக ஐவரி கோஸ்ட், கானா, லிபெரியா, நைஜீரியா,  உள்ளிட்ட நாடுகளில்  பரவலாக காணப்படுகின்றன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading