Local

நாளை இலங்கையில் உள்ள அனைத்து பள்ளிகளிவாசல்களிலும் துஆ பிரார்த்தனை

நாளையதினம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதக் குண்டுத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து அனைத்து பள்ளிவாசல்களிலும் விசேட பிரார்த்தனை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையினை முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் விடுத்துள்ளது.

அந்தவகையில் நாளை காலை 8 .40 முதல் 8.55 வரை பள்ளிவாசல்களில் இந்த பிரார்த்தனை நடைபெறவுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலினால் ஏற்பட்ட வடுக்கள் இலங்கையர்கள் அனைவரது உள்ளங்களிலும் இன்னும் ஆறாமல் இருப்பதாகவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையிலும் நாட்டில் நிலையான சமாதானம் ஏற்பட வேண்டியும் நாளை விசேட பிரார்த்தனையை ஏற்பாடு செய்யுமாறு இலங்கை வக்பு சபையும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களமும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading