Local

நிக்கவெரட்டிய பிரதேசத்தில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு வீட்டுக்கு பலத்த சேதம!

கந்தேகெதர, நிக்கவெரட்டிய பிரதேசத்தில் சற்று முன்னர் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் வீடு ஒன்றுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக நிக்க வெரட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

வெடிப்பு சம்பவத்தின் போது தாயும் தந்தையும் வயலுக்குச் சென்றிருந்ததாகவும், மூத்த பிள்ளை பாடசாலைக்கும் இரண்டாவது பிள்ளை உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தமையால் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சமையல் எரிவாயு சிலிண்டரின் கசிவு காரணமாக வெடித்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து பொலிஸார் மேலும் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading