Features

நித்தியானந்தாவை திருமணம் செய்ய தயார் பிரபல நடிகை தெரிவிப்பு!

பாலியல் குற்ற வழக்கில் தலைமறைவாக இருக்கும் சுவாமி நித்தியானந்தாவை பற்றி ஏதாவது ஒரு தகவல் வெளிவந்தாலும், உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வருகிறார் என அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.

இதனிடையே, தமிழ் சினிமா நடிகையான பிரியா ஆனந்த் நித்தியானந்தாவை திருமணம் செய்துகொள்வேன் என மிகவும் ஜாலியாக கொடுத்துள்ள பேட்டி தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதாவது அவர் அளித்த பேட்டியில், “நித்தியானந்தாவை எனக்கு மிகவும் பிடிக்கும். நித்தியானந்தாவை திருமணம் செய்தால் பிரியா ஆனந்த் என்ற தன்னுடைய பெயரைக் கூட மாற்ற வேண்டிய தேவையில்லை” என தெரிவித்துள்ளார்.

மேலும், அவருக்கு அனைவரையும் சுலபமாக ஈர்க்க தெரியும் என்றும், நித்தியானந்தாவை இத்தனை பேர் பின் தொடருகிறார்கள் என்றால் அவரிடம் ஏதோ ஒன்று இருக்கிறது என்று தானே அர்த்தம்” என பேசி தற்போது ட்ரெண்டாகியுள்ளார் ப்ரியா ஆனந்த்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading