Sports

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 190 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள முடிவு செய்தது.

இதன்படி களம் இறங்கிய தென்னாப்பிரிக் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 357 ஓட்டங்களை பெற்றது.

தென்னாப்பிரிக் அணி சார்பில் Rassie van der Dussen அதிகூடிய ஓட்டங்களாக 133 ஓட்டங்களையும், Quinton de Kock 114 ஓட்டங்களையும் பெற்றனர்.

நியூஸிலாந்து அணி சார்பில் Tim Southee 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் 358 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 35.30 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 167 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.

நியூசிலாந்து அணி சார்பில் Glenn Phillips அதிகபட்சமாக 60 ஓட்டங்களையும் Will Young 33 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் தென்னாப்பிரிக்க அணி  சார்பில் Keshav Maharaj 4 விக்கெட்டுக்களையும் Marco Jansen 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading