Local

நீச்சல் பழகிய போது மூவர் நீரில் மூழ்கிப் பலி!

​கொஸ்கொட பிரதேசத்தில் நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் கொஸ்கொட, துவே மோதர கங்கையில் நீச்சல் பழகிய போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இதன்போது, ஒரே குடும்பத்தை சேர்ந்த தாத்தா மற்றும் அவரின் பேரன்களான 6 வயதுடைய இரட்டை குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடற்படையின் சுழியோடிகளால் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டதாக அறியமுடிகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading