Local

நீர்க் கட்டணங்கள் குறித்து வெளியான அறிவிப்பு

மின்சார கட்டணம் அதிகரித்திருந்தாலும், தற்போதைக்கு நீர் கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.

அதற்கான எந்தவொரு கலந்துரையாடலும் இதுவரை நடைபெறவில்லை என என குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள் நீர் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படாது என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஏதேனும் மாற்றம் செய்யப்படுமானால் அது ஜூன் 30ஆம் திகதிக்குப் பின்னரே அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.

நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாக

மேலும், நாட்டில் நிலவி வரும் கடுமையான வறட்சி காரணமாக சில பகுதிகளில் தொடர்ச்சியான நீர் விநியோகத்தில் இடையூறு ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதனால், அப்பகுதிகளில் மக்களின் தேவைகளை சமநிலைப்படுத்தும் நோக்கில் சில இடங்களில் நீர் விநியோகம் கட்டுப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நீர்க் கட்டணங்கள் குறித்து வெளியான அறிவிப்பு | No Change In Water Bill

லபுகம மற்றும் கலட்டுவாவ உள்ளிட்ட முக்கிய நீர்மூலங்களில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாகவும், இதனால் அடுத்த இரண்டு வாரங்களில் நீரை மிகச் சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது நீர் தேவைகள் அதிகரித்து வருவதால், அத்தியாவசிய தேவைகளுக்கே நீரை பயன்படுத்தி, தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்ய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading