நுவரெலியாவில் வாக்குப்பதிவில் வீழ்ச்சி!

1989 முதல் 2020வரையான வாக்கு பதிவு வீதம்….
பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பில் நுவரெலியா மாவட்டத்தில் 75 வீத வாக்குபதிவு இடம்பெற்றதாக மாவட்டத்தின் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி ஆர்.எம்.பி.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் மற்றும் அதற்கு முன்னர் நடைபெற்ற பொதுத்தேர்தல்களின்போது அளிக்கப்பட்ட வாக்களிப்பு வீதங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை சரிவைக்காட்டுகின்றது.
ஜனாதிபதித்தேர்தலின்போது 85.06 வீதமானோர் வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1989 முதல் 2015 வரை நடைபெற்றுள்ள பொதுத்தேர்தல்களின்போது நுவரெலியா மாவட்டத்தில் வாக்களிப்பு வீதம் வருமாறு,
?1989 – 81.49%
?1994 – 83.7%
?2000 – 82.86%
?2001 – 82.34%
?2004 – 80.70%
?2010 – 66.38%
?2015 – 78.77%
சீரற்ற காலநிலை உட்பட மேலும் சில காரணங்களால் வாக்களிப்பில் கடந்தகாலங்களுடன் ஒப்பிடுகையில் வாக்களிப்பில் சிறு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்படுகின்றது. அதேபோல் வாக்களிப்பு தினத்தில் நுவரெலியா மாவட்டத்தில் பாரிய வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை.
