Local

நுவரெலியா வாகன விபத்து பஸ் சாரதி கைது!

நுவரெலியா நானுஓயா ரதெல்ல பகுதியில் நேற்று (20) இரவு அதிவேகமாக பயணித்த பஸ் ஒன்று வேன் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் 7 பேர் உயிரிழந்திருந்தனர்.

விபத்து குறித்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் 62 வயதுடைய பஸ்ஸின் சாரதியை கைது செய்துள்ளனர்.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் போது குறித்த பஸ் கவனக்குறைவாக செலுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.

அதிவேகமாக வந்த பஸ் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி மாணவர்கள் 41 பேரும் அவர்களது பெற்றோர்கள் உட்பட 53 பேரும் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading