Local

நேட்டோவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த தயாராகும் ரஷ்யா!

நேட்டோ அதன் அணு ஆயுதங்களை உக்ரைன் படைகளுக்கு வழங்கி அதன் வழி ரஷ்யா மீது தாக்குவதே சிறந்த உத்தியாக இருக்க முடியும் என்பதை நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். 

தந்திரோபாய அணு ஆயுதங்கள் மூலம் ரஷ்யாவின் நிலப்பரப்பினுள் உக்ரைன் தாக்குமானால் மொஸ்கோ முழு அளவிலான அணு ஆயுதப் போரில் இறங்குகின்ற ஆபத்தும் உள்ளது. 

அண்டை நாடுகள் பலவும் கூட அணுக்கதிர் வீச்சு அழிவுகளைச் சந்திக்க நேரிடும். உக்ரைன் மீது ரஷ்யா அதன் முதலாவது அணு ஆயுதத் தாக்குதலை நடத்தும் பட்சத்தில் புடின் மீதான உலகளாவிய எதிர்ப்பு வலுவடையும். போரில் நடு நிலைப் போக்கை வகிக்கின்ற இந்தியாவும் சீனாவும் அவருக்கு எதிரான அணியின் பக்கம் நிற்க நேரிடும். சீனாவின் ஆதரவை இழப்பது புடினை மேலும் தனிமைப்படுத்தி விரக்திக்குள் தள்ளலாம். 

அதனால் தனித்துப் போன சூழ்நிலையில் அவர் எடுக்கக் கூடிய ஆபத்தான முடிவுகள் ஐரோப்பாவை மட்டுமன்றி முழு உலகையுமே அழிவுக்குள் தள்ளிவிடலாம். 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading