நேபாளத்தில் நடந்தது என்ன ?
புதன்கிழமை, ஆகஸ்ட் 26 காலை 8.37 மணிக்கு. நேபாளம் – திபெத் பார்டர்ல இருக்கிற லாங்டாங் தேசிய பூங்கா பகுதி. ரசுவா மாவட்டம். கடல் மட்டத்துல இருந்து 5200 மீட்டர் உயரத்துல இருந்த ஒரு பெரிய பனிப்பாறை, அதுக்குள்ள உறைஞ்சிருந்த ஏரியோட சேர்ந்து திடீர்னு உடைஞ்சிருக்கு.
சுமார் 2000 அடி அகலத்துக்கு, 40 லட்சம் முதல் 60 லட்சம் கியூபிக் மீட்டர் அளவுள்ள பனிப்பாறை, தன்னோட தாய் பாறையில இருந்து பிரிஞ்சு, கிட்டத்தட்ட 1200 மீட்டர் கீழே பள்ளத்தாக்குல விழுந்திருக்கு.
விழுந்த வேகம் எவ்வளவு தெரியுமா? மணிக்கு 300 முதல் 450 கிலோமீட்டர் வரைக்கும். புல்லட் ட்ரெயின் வேகத்துக்கு நிகரானது. இந்த அதிர்வு தான் ரிக்டர்ல 4.4 முதல் 5.2 வரைக்கும் பதிவாகி இருக்கு. முதல்ல இது நிலநடுக்கமோன்னு நினைச்சாங்க, ஆனா USGS சொன்னது இது பனிப்பாறை சரிவால வந்த அதிர்வு தான்னு.
இதைத் தான் GLOF – Glacier Lake Outburst Flood அதாவது பனிப்பாறை ஏரி திடீர் வெள்ளம்னு சொல்றாங்க.
மேல இருந்து பனிப்பாறை மட்டும் விழல. கூடவே 400 முதல் 600 கோடி லிட்டர் தண்ணி, மண், பாறை, மரம் எல்லாம் சேர்ந்து சேறு கலந்த பெருவெள்ளமா மாறி இருக்கு. ஒரு சேற்று சுனாமி மாதிரி.
அது லெண்டே கோலா மற்றும் போட்டேகோஷி ஆறுகள் வழியா வெறும் 30 ல இருந்து 40 நிமிஷத்துல 40 கிலோமீட்டர் தூரத்தை கடந்து வந்திருக்கு. வழியில இருந்த கிராமங்கள், ரோடுகள், பாலங்கள் எல்லாம் பெரிய அளவுல பாதிக்கப்பட்டிருக்கு. ஆரம்ப தகவல்களின்படி நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு, பலர் மாயமாகி இருக்கிறதா சர்வதேச செய்திகள் சொல்லுது.
ஏன் இப்படி நடந்துச்சு?
இமயமலை பகுதியில வெப்பம் அதிகமாகுறதால பனிப்பாறைகளுக்கு உள்ளேயே தண்ணி ஓட்டம் உருவாகுது. அது பனிப்பாறையை உள்ளுக்குள்ள இருந்தே பலவீனமாக்கி பிளவு வர வைக்குது. ஒரு கட்டத்துல தாங்க முடியாம உடைஞ்சு விழுந்துருது. நேபாளத்துல இதே மாதிரி ஆபத்து நிலையில இன்னும் 47 ஏரிகள் இருக்கிறதா ஆய்வாளர்கள் சொல்றாங்க.
இது இயற்கையோட நிகழ்வு தான். ஆனா அந்த ஆறுகள் போற வழியில நாம கட்டிடங்களையும், ஊர்களையும் பெருக்கி இருக்கிறதால பாதிப்பு இன்னும் அதிகமா தெரியுது.
இயற்கையை நம்மால தடுக்க முடியாது. ஆனா புரிஞ்சுக்க முடியும். இன்னும் நல்ல செயற்கைக்கோள் கண்காணிப்பு, முன் எச்சரிக்கை கருவிகள், திட்டமிட்ட நகரமயமாக்கல் எல்லாம் ரொம்ப அவசியம். 30 நிமிஷத்துல வர்ற வெள்ளத்துல இருந்து தப்பிக்கிறது ரொம்ப கஷ்டம்.
இந்த சம்பவத்துல பாதிக்கப்பட்ட அனைவருக்கும், தங்கள் உறவுகளை இழந்து வாடும் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். இயற்கையோடு இணைந்து வாழ நாம் கத்துக்கணும்.
நேபாளம் மீண்டு வர நம்மால் முடிந்த ஆதரவை கொடுப்போம்.

You must be logged in to post a comment.