Cinema

நேற்று ஓட்டல் அறையில் சந்தோஷமாக இருந்த நடிகை இன்று அதே அறையில் சடலமாக மீட்பு!

ஓட்டல் அறையில் இருந்து நேற்று ஜாலியாக ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்ட நடிகை, இன்று அதே அறையில் இருந்து பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

போஜ்புரி படங்களில் நடித்து பிரபலமானவர் ஆகன்ஷா டூபே. 25 வயதே ஆகும் இவர் உத்தரப்பிரதேசம் மாநிலம் மிர்சாபூரில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தால் படங்களில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு சோசியல் மீடியாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மட்டும் 17 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்களை கொண்டிருக்கிறார் ஆகன்ஷா.

இதனால் இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் அவர், ரசிகர்களை கவரும் விதமாக அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார்.

அந்த வகையில் படத்தின் ஷூட்டிங்கிற்காக வாரணாசி சென்றிருந்த அவர், அங்கிருந்த பனாரஸ் சர்நாத் ஓட்டலில் தங்கி இருந்துள்ளார்.

நேற்று, மாலை ஓட்டலில் இருந்தபடி உற்சாகமாக நடனமாடி வீடியோ வெளியிட்டிருந்த அவர் இன்று அதே ஓட்டல் அறையில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டு உள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading