Sports

பங்களாதேஷ் அணி வீரர் முஷ்பிகுர் ரஹீம் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு!

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பங்களாதேஷ் அணி வீரர் முஷ்பிகுர் ரஹீம் அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

மேலும், பங்களாதேஷ் பிரிமியர் லீக் உள்ளிட்ட பிற உரிமைப் போட்டிகளிலும் தொடர்ந்து பங்கேற்பேன் என தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை மேற்கொண்டு அவர் தெரிவித்துள்ளார்.

ஆசியக் கிண்ண ரி20 போட்டித் தொடரில் இருந்து பங்களாதேஷ் அணி வௌியேறியுள்ள நிலையில் அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பங்களாதேஷ் அணிக்காக அவர் 102 ரி20 போட்டிகளில் விளையாடி 1500 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

6 அரைச்சதங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading