Local

பங்களாதேஷ் உட்பட 3 நாடுகளிடம் இருந்து இலங்கை 215 கோடி டொலர்களை கடனாக பெறுகிறது!

இலங்கை அரசாங்கம் மூன்று நாடுகளிடமிருந்து சுமார் 215 கோடி அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுக் கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மத்திய வங்கியிடம் கையிருப்பில் உள்ள அந்நிய செலாவணித் தொகை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ள காரணத்தினாலே இவ்வாறு அவசரமாக கடன் பெற்றுக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, சீனாவிடம் 150 கோடி அமெரிக்க டொலர்களையும், இந்தியாவிடம் 40 கோடி அமெரிக்க டொலர்களையும், பங்களாதேஷிடம் 25 கோடி அமெரிக்க டொலர்களையும் கடனாக பெற்றுக்கொள்ள உள்ளது.

இந்தியா மற்றும் பங்களாதேஷிடம் பெற்றுக்கொள்ளும் 65 கோடி அமெரிக்க டொலர் கடன் செலாவணி பரிமாற்ற அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட உள்ளது.
இந்தியாவிடமிருந்து இரண்டு கட்டங்களாக ஒன்பது மாதத்தில் மீள செலுத்தும் வகையில் கடன் பெற்றுக் கொள்ளப்பட உள்ளதுடன், பங்களாதேஷிடம் மூன்று கட்டங்களாக கடன் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.

சீனாவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட உள்ள 150 கோடி அமெரிக்க டொலர் கடன் நீண்ட கால அடிப்படையில் கிடைக்கப் பெறவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading