Sports

பங்களாதேஸையும் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்!

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று சார்ஜாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் மோதின.

நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 127 ஓட்டங்கள் எடுத்தனர்.

இதையடுத்து, 128 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது.

இறுதியில், ஆப்கானிஸ்தான் 18.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 131 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் சூப்பர் 4 சுற்றுக்குள் ஆப்கானிஸ்தான் நுழைந்தது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading