Local

பசிலுக்கு அமெரிக்காவில் பெருமளவு சொத்துக்கள் : அம்பலப்படுத்தும் முன்னாள் எம்.பி

அமெரிக்காவில் (United States) தனது பெயரிலும் , தன்னுடைய குடும்பத்தாரது பெயர்களிலும் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) பாரியளவு செத்துக்களை சேமித்து வைத்திருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.

நிதி குற்ற புலனாய்வு பிரிவில் நேற்றைய தினம் (03.01.2025) வாக்குமூலம் வழங்க வந்திருந்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் “பசில் ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தாருக்கு அமெரிக்காவில் உள்ள செத்துக்கள் தொடர்பில் சில வருடங்களுக்கு முன்னர் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அது தொடர்பில் நான் எனது தெளிவுபடுத்தலை வழங்கினேன். இது தெடர்பில் எழுத்துமூல சில ஆவணங்களையும் நாம் சமர்பித்து இருக்கினே்றோம்.

 

பசில் ராஜபக்ச அமெரிக்காவில் எந்த தொழிலும் செய்யவில்லை.ஆனால் எம்மால் வழங்கப்பட்டுள்ள ஆவணங்களில் அவருடைய சொத்து விபரங்கள் அதற்கு முரணாக காணப்படுகிறது.

இலங்கையில் செய்த தொழில், பெற்றுக்கொண்ட பணத்தினூடாக அவர் இவ்வாறு சொத்துக்களை கோரி இருக்கின்றார்.

நாம் வழங்கிய தகவல்களை அடிப்படையாக கொண்டு ஏனைய தகவல்களை சேகரிப்பது காவல்துறையின் கடமையாகும்.

பசிலுக்கு அமெரிக்காவில் பெருமளவு சொத்துக்கள் : அம்பலப்படுத்தும் முன்னாள் எம்.பி | Basil Rajapaksa A Large Amount Of Property In Us

இது தொடர்பான விசாரணைகள் முறையாக இடம்பெற்றால் இன்னும் பல் தகவல்கள் கிடைக்கப்பெறும்.

பசில் ராஜபக்ச இரட்டை குடியுரிமை கொண்டவர் ஆவார். எனவே அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிரான சட்ட சட்ட நடவடிக்கையை விட பசில் ராஜபக்சவிற்கு எதிரான நடவடிக்கை கடுமையாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading