Cinema

12 ஆண்டுகளின் பின்னர் வெளிவரும் விஷாலின் மத கஜ ராஜா

சுந்தர் சி இயக்கத்தில், விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனங்கள் தயாரிப்பில் விஷால், சந்தானம், வரலட்சுமி, சதீஷ் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு உருவான திரைப்படம் மத கஜ ராஜா.

சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இப் படம் திரைக்கு வராமல் இருந்தது.

இப் படத்துக்கு விஜய் அண்டனி இசையைமத்துள்ள நிலையில், அண்மையில் இப் படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இப் படம் எதிர்வரும் 12 ஆம் திகதி பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளிவரவுள்ளது.

சுமார் 12 ஆண்டுகளின் பின்னர் இத் திரைப்படம் வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading