Local

பசில் ராஜபக்சவும் நாட்டை விட்டு தப்பி ஓட்டம்!

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி அவர் டுபாய் சென்று அங்கிருந்து அமெரிக்காவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், நேற்று காலை அவர் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு முற்பட்ட போதிலும் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளின் எரிப்பு காரணமாக வீடு திரும்பியிருந்தார்.

இந்நிலையில், மீண்டும் அவர் நாட்டில் இருந்து வெளியேறி அமெரிக்க செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவரது ஐயோமா ராஜபக்ச ஆகியோர் இன்று அதிகாலை இலங்கை இராணுவத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றின் மூலம் இலங்கயிலிருந்து தப்பிச் சென்றனர்.

அவர்கள் சென்ற விமானம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.50 மணிக்கு தரையிறங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading