Local

படகு விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

கிண்ணியா குறிஞ்சாகேணியில் இடம்பெற்ற படகு விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

முப்பது வயது தாய் ஆறுவயது மகன் மூன்றரை வயது மகள் ஆகியோர் படகுவிபத்தில் உயிரிழந்துள்ளமை உறுதியாகியுள்ளது.

இன்னொரு குடும்பத்தை இரு பெண்பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

70 வயது நபர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
படகுவிபத்தின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட 19 பேர் கிண்ணியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,ஆறுவயது குழுந்தையொன்றை திருகோணமலை வைத்தியாசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading