Cinema

பணத்தை திருடிய பிரபல நடிகை!

கொல்கத்தா சர்வதேச புத்தக கண்காட்சியில் திருடிய டிவி நடிகை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் சர்வதேச புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சில தினங்களுக்கு முன் கலந்துகொண்ட பிரபல டிவி நடிகை ரூபா தத்தா பணப்பை (Money Purse)ஒன்றை  குப்பை தொட்டியில் வீசியுள்ளார். இதனை அங்கிருந்த காவலர் ஒருவர் கவனித்து விட்ட நிலையில் அவருக்கு ரூபா மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

இதனிடம் அவரிடம் நடத்திய விசாரணையில் ரூபா தத்தா முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்துள்ளார். இறுதியாக அவர், தான் புத்தக திருவிழாவில் பணம் திருடியதை ஒப்புக் கொண்டார். ரூபாவிடம் இருந்து மொத்தம் 75 ஆயிரம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். இன்னும் சிலபேருக்கு இந்த திருட்டில் தொடர்பு இருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

ஏற்கனவே டிவி நிகழ்ச்சிகளில் நடித்துள்ள நடிகை ரூபா தத்தா பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் துன்புறுத்தல் புகாரை அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading