North

பதவியேற்றகையோடு கிளிநொச்சி சென்றார் வடக்கு ஆளுநர்

வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்தார்.

கிளிநொச்சி அரசாங்க அதிபர் பணிமனைக்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநரை அரசாங்க அதிபர் உள்ளிட்ட பணிக்குழாமினர் வரவேற்றனர்.

இதன்போது கிளிநொச்சி மாவட்ட நிலைமைகள் தொடர்பிலும் அரச அதிகாரிகளுடன் ஆராய்ந்தார்.

கிளிநொச்சியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் பின்னரான நிலைமகள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்ததுடன் கிளிநொச்சி மாவட்டத்தின் ஏனைய பல விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தினார்.

ஆளுநருடைய செயலாளர் எல்.இளங்கோவன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading