Local

ஆட்டத்தை ஆரம்பித்தார் தயாசிறி! – நேரில் சென்று வாழ்த்தினார் மைத்திரி

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய பொதுச் செயலாளராக தயாசிறி ஜயசேகர இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இன்று காலை கொழும்பில் அமைந்துள்ள அந்தக் கட்சியின் அலுவலகத்தில் வைத்து அவர் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன்போது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்துகொண்டார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, மஹிந்த சமரசிங்க, திலங்க சுமதிபால, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாச உள்ளிட்டவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading