World

பதிலடி தாக்குதலை ஆரம்பித்தது ஈரான்…!!!

 

அமெரிக்க ராணுவத்தின் அக்கிரமச் செயல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க வான்படை தளம் ஒன்றை இலக்கு வைத்து தங்களது படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) அறிவித்துள்ளது.

​ஈரானின் பண்டார் அப்பாஸ் விமான நிலையப் பகுதிக்கு அருகே அதிகாலையில் அமெரிக்க ராணுவத்தினால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாகவே, இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஈரானின் அரை-அதிகாரப்பூர்வ தஸ்நிம் (Tasnim) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா நடத்திய தாக்குதல்களின் பிறப்பிடமாக இந்த வான்படை தளம் அடையாளம் காணப்பட்டதாகவும், எனினும் இத்தாக்குதலுக்கு உள்ளான அமெரிக்க ராணுவ தளம் அமைந்துள்ள இடத்தை ஈரான் ராணுவம் தற்சமயம் வெளிப்படுத்தவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading