World

பத்து பைசாவிற்கு ஐஸ்கிரீம் விற்றவர் 5000 கோடிக்கு மேல் வசூல் செய்கிறார்!

1971ஆம் ஆண்டு முன்புவரை பத்து பைசாவிற்கு வீதியில் ஐஸ் விற்றவர் ஜிகே சந்திரமோகன்
சொத்தை விற்று கடன் வாங்கி ரூ13ஆயிரத்தை  திரட்டி 1971ஆம் ஆண்டு ஜிகே அண்ட் கோ நிறுவனத்தை உருவாக்கி அருன் ஐஸ்க்ரீம் என்னும் தயாரிப்பை தமிழகத்திற்கு கொடுத்தார்
இன்று தமிழக பட்டித்தொட்டியிலும் இவருடைய தயாரிப்பான அருன் ஐஸ்க்ரீம் பிரபலமாகிவிட்டது
இதை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது

ஐஸ்க்ரீமிற்கு மூலதனம் பால் கொள்முதல் பிறகு அந்த பாலையும் தொழிலாக செய்தார் 1995ஆம் ஆண்டு அரோக்யா பால் என்னும் தயாரிப்பினை சந்தைகளில் இறக்கவிட்டார் அதுவும் இவருக்கு நல்ல ஒரு வெற்றியே பெற்றுக்கொடுத்தது
அதோடு நின்றுவிடாமல் மோர் தயிர் வெண்ணைய் நெய் என்று பால் சம்பந்தப்பட்ட பொருட்களையும் சந்தையில் இறக்கிவிட்டார் எல்லாமே மக்களிடம் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது இன்று இவருடைய நிறுவனம் வருடத்திற்கு சுமார் ரூ5000 கோடிவரை வருமானம் ஈட்டுகிறது உண்மை உழைப்பு உயர்வு இவரை உச்சத்தில் ஏற்றியுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading