Sports

பரபரப்பான ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணி வெற்றி!

2023 – உலகக் கிண்ணத் தொடரின் இன்றைய போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சைத் தெரிவுசெய்தது.

இதன்படி ,முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 49.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 388 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அணியின் அதிகபட்சமாக 106 ஓட்டங்களை டிராவிஸ் ஹெட் பெற்றதுடன் டேவிட் வார்னர் 81 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்தநிலையில், 389 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து ஓட்டங்களை 383 மாத்திரம் பெற்ற நிலையில்அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணிசார்பில் அதிகபடியாக ரச்சின் ரவீந்திரன் 116 ஓட்டங்களையும் டேரில் மிட்செல் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading