World

பரீட்சையில் சித்தியடையாத மாணவனின் விபரீத முடிவால் காதலித்த மாணவியும் தற்கொலை!

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் திகதி முடிவடைந்தது. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து நேற்று 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியது.

இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பயின்று வந்த காதலன் தேர்வில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரை காதலித்து வந்த சிறுமியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செம்பரம்பாக்கத்தை சேர்ந்த நந்தினி பூந்தமல்லியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். நேற்று இரவு திடீரென நந்தினி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆவடியை சேர்ந்த தேவா என்ற மாணவன் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தேவாவை நந்தினி காதலித்து வந்ததாகக் கூறப்படும் நிலையில் காதலன் தேவா தற்கொலை செய்துகொண்டதால் மாணவி நந்தினியும் தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading