World

பலஸ்தீனில் மீண்டும் பதற்றம் ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம்!

கிழக்கு ஜெருசலத்தில் வலதுசாரி இஸ்ரேலியர்கள் கொடி அணிவகுப்பு நடத்தியதால் இஸ்ரேல் – பலஸ்தீனிய பதற்றம் மீண்டும் உயர்ந்துள்ளது. இது பலஸ்தீன் முழுவதும் ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியுள்ளது.

கிழக்கு ஜெருசலமில் இஸ்ரேலிய அணிவகுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்கள் கிழக்கு காசா பகுதிக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான எல்லைப் பகுதிகளில் அணிதிரண்டனர்.

ஆர்ப்பாட்டங்கள் பெரும்பாலும் தெற்கு நகரமான கான் யூனிஸுக்கும் வடக்கு நகரமான பீட் ஹனவுனுக்கும் இடையிலான எல்லை வேலிக்கு அருகே நடந்தன.

இதனால் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த இஸ்ரேலிய வீரர்கள் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைத்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading