World

பல்லியால் உயிரிழந்த குடும்பம்!

நைஜீரியாவின் ஓகுன் மாகாணத்தில் 6 பேர் கொண்ட குடும்பம் பல்லியால் கொல்லப்பட்டுள்ளது.

ஜான் சாமுவேல் என்ற நபர், அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் உறவினர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் வசித்த வீட்டில் இருந்து சத்தம் எதுவும் கேட்காததால் அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்தபோது அவர்கள் இறந்து கிடந்தனர்.

இரவு உணவு உண்ட பின்னர் அவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், உணவில் விஷம் கலந்தமையே மரணத்திற்கு காரணம் எனவும் நைஜீரிய பொலிஸார் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளனர்.

அயலவர்கள் வீட்டைச் சோதனையிட்டபோது சாமுவேல் உள்ளிட்ட குழுவினர் இரவு உணவு சாப்பிட்ட சூப் பானையில் இறந்து கிடந்த பல்லியை கண்டதாக நைஜீரிய ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால் உணவு விஷம் கலந்ததால் இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading