World

பள்ளிவாசலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழப்பு 62 ஆக உயர்வு!

பாகிஸ்தானிலுள்ள  பள்ளிவாசலொன்றில் நேற்று முன்தினம் (04)  பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புத் தாக்குதலில் 62 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பெஷாவர் நகரம் கோசா ரிசல்டர் என்ற பகுதியில் உள்ள  ஷியா பிரிவினருக்குச் சொந்தமான பள்ளிவாசலிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ தினத்தன்று குறித்த பள்ளிவாசலுக்கு வந்த மர்ம நபர்கள் இருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு  தமது உடலில் கட்டியிருந்த வெடி குண்டை வெடிக்கச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் 62 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இத் தாக்குதலுக்கு  ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இதனையடுத்து இப்பயங்கரவாதத் தாக்குதலுக்கு உலக நாடுகள் தமது கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading