Local

பஸிலுக்காக பிரதமர் மஹிந்த தவறவிட்ட சாதனை!

அரசியல் களத்தில் மஹிந்த ராஜபக்ச படைக்கவிருந்த மற்றுமொரு சாதனை கைநழுவிபோயுள்ளது. இலங்கை அரசியல் வரலாற்றில் நிதி அமைச்சு பதவியை வகித்தவர்களில் ரோனி த மேல் என்பவரே 12 தடவைகள் வரவு – செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளார். இதுவே இதுவரை சாதனையாக உள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில் மஹிந்த ராஜபக்ச இதுவரை 11 வரவு – செலவுத் திட்டங்களை நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார். இந்நிலையில் அடுத்தாண்டுக்கான பாதீட்டை அவர் முன்வைத்திருக்கும் பட்சத்தில் ரோனி த மேலின் சாதனையை சமப்படுத்தியிருக்ககூடும்.

எனினும், பஸில் ராஜபக்சவுக்கு நிதி அமைச்சு பதவியை மஹிந்த ராஜபக்ச விட்டுக்கொடுத்துள்ளார். மீண்டும் அவர் நிதி அமைச்சு பதவியை ஏற்கும் வாய்ப்பு இல்லை. இதனால் சாதனையை முறியடிக்க முடியாமல்போய்விட்டது.

இலங்கை அரசியலில் அதிகூடிய விருப்பு வாக்குபெற்று நாடாளுமன்றம் தெரிவான உறுப்பினர் என்ற சாதனையை கடந்தாண்டு மஹிந்த படைத்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading