Local

பஸிலுக்கு 7 மூளைகள் இருக்கிறதாம் அந்த 7 மூளைகளையும் வைத்துக் கொண்டு இவ்வளவு காலமும் என்ன செய்தார்?

பஷில் ராஜபக்க்ஷவுக்கு 7 மூளைகள் இருப்பதாகக் கூறுகின்றனர். அந்த 7 மூளைகளையும் வைத்துக் கொண்டு இவ்வளவு காலமும் என்ன செய்தார் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் வினவியுள்ளார்.

பஷில் ராஜபக்ஷவின் வெற்றி அல்லது தோல்வியை ஆராய்ந்து பார்க்க இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும் என கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

பஷில் ராஜபக்க்ஷவுக்கு 7 மூளைகள் இருப்பதாகக் கூறுகின்றனர். அந்த 7 மூளைகளையும் வைத்துக் கொண்டு இவ்வளவு காலமும் என்ன செய்தார்? இன்னும் சிறிது காலம் செல்லும் போது யுத்த வெற்றியின் திரைக்குப் பின்னாலும் பஷில் ராஜபக்க்ஷவே உள்ளார் என்று கூறினாலும் நான் புதுமையடைப் போவதில்லை என எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

எனவே பஷில் ராஜபக்க்ஷ குறித்து நான் தற்போது எதையும் கூற விரும்பவில்லை. தாமரை மொட்டு சின்னத்துக்கு அதிகாரத்தைப் பெற அவரே முன்னின்று செயற்பட்டார்.

மேலும் ஜனாதிபதி செயலணியின் தலைவராகவும் அவர் செயற் பட்டுள்ளார். ஆனால் அமைச்சர் பதவி இல்லாமல் எதனையும் அவரால் செய்ய முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

எனவே பஷில் அமைச்சர் பொறுப்பை ஏற்று அவர் தோல்வியடைகிறாரா அல்லது வெற்றியடைகிறாரா என்பதை சில மாதங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.

மக்களை இவ்வாறு தொடர்ந்தும் ஏமாற்றிக் கொண் டிருக்க முடியாது. 69 இலட்சம் வாக்குகளில் தற்போது எத்தனை வாக்குகளை அவர்களால் பெற்றுக் கொள்ள முடியும்?

எனவே பஷில் ராஜபக்க்ஷவுக்கு பாராளுமன்றம் வர இடமளிப்போம்.

இறுதியாக பஷில் ராஜபக்க்ஷவுக்கும் நாட்டை நிர்வகிக்க முடியாது என் றும் சகலரும் 70 வயதை கடந்து விட்டனர் என்றும் எனவே நாமல் ராஜபக்க்ஷவே அடுத்த தலைவர் என்று கூறினாலும் நான் புதுமையடையப் போவதில்லை எனவும் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading