Local

பஸ் சாரதியாக மாறிய பாராளுமன்ற உறுப்பினர்!

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மாவட்டவான் எனும் இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கான கல் வைக்கும் நிகழ்வுக்கு சென்றுகொண்டிருக்கும்போது வீதியில் பயணிகளுடன் ஒரு பஸ் நிறுத்தப்பட்டிருந்த பஸ் ஐ அவதானித்துள்ளார்.

தனது வாகனத்தை நிறுத்தி என்ன நடந்ததென்று விசாரித்திருக்கின்றார்.
அதற்கு பஸ் சாரதி வீதி மிக மோசமாக உள்ளதனால் செல்ல முடியவில்லை. பஸ் இல் இருப்பவர்கள் அரச ஊழியர்கள் அவர்கள் வேலைக்கு செல்லவேண்டும், என்ன செய்வதென்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

உங்களை பாதுகாப்பாக உரிய இடத்திற்கு நான் கொண்டு செல்கின்றேன் என்று பஸ் சாரதியாக மாறி அவர்களை உரிய இடத்திற்கு பத்திரமாக கொண்டு சென்றுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading