World

பஸ் மீது ரயில் மோதியதில் 7 பேர் பலி 17 பேர் படுகாயம்!

மெக்சிகோவின் குரேடாரே மாகாணம் எல்.மார்க்யூஸ் நகரில் உள்ள ஒரு ரயில்வே கிராசிங்கை (crossing) பயணிகள் பஸ் ஒன்று கடந்தபோது ரயில் மோதியது.

இதில் அந்த பஸ், ரயிலில் சிக்கி தண்டவாளத்தில் இழுத்து செல்லப்பட்டது.  இந்த விபத்தில் 7 பேர் பலியானார்கள்.  17 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை மீட்டு மருத்துவமனையில்  சேர்த்தனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  மெக்சிகோவில் ரயில் சிக்னல்கள் மற்றும் தடுப்பு பாதைகளில் குறைபாடுகள் இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading