World

பாகிஸ்தானில் கிளர்ச்சியாளர்களின் கொடூரம் ; பேருந்தில் சென்றவர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பஸ்சில் சென்ற 9 பயணிகளை கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் குவெட்டாவில் இருந்து லாகூர் சென்று கொண்டிருந்த பஸ்சில் துப்பாக்கியுடன் ஏறிய கிளர்ச்சியாளர்கள் குழு, அதில் இருந்த பயணிகளை தீவிரமாக சோதனை செய்தனர்.

பாகிஸ்தானில் கிளர்ச்சியாளர்களின் கொடூரம் ; பேருந்தில் சென்றவர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் | Terrorist Attack On Bus Passengers In Pakistan

பின்னர் சில பயணிகள் கடத்தப்பட்ட நிலையில் அதில் 9 பேரை கிளர்ச்சியாளர்கள் கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றனர்.

மாகாணத்தின் சோப் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடந்ததாகவும் சுட்டுக்கொல்லப்பட்ட ஒன்பது பேரும் பஞ்சாப் மாகாணத்தின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களது உடல்கள் குண்டுத் துளைத்த காயங்களுடன் மலைகளில் கண்டெடுக்கப்பட்டதாகவும் உதவி ஆணையர் சோப் நவீத் ஆலம் தெரிவித்தார்.

எவ்வாறு இருப்பினும் இந்த கொடூர சம்பவத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த மக்களையும், பலுசிஸ்தானில் வெவ்வேறு நெடுஞ்சாலைகளில் செல்லும் பயணிகள் பஸ்களையும் கிளர்ச்சியாளர்கள் குறிவைப்பது இது முதல் முறை அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading