World

பாகிஸ்தானில் படகு விபத்து 20 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தான் – சிந்து மாகாண எல்லையில் உள்ள இண்டஸ் ஆற்றில் படகொன்று கவிழ்ந்ததில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தான் – ராஜன்பூர் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் பங்கேற்று விட்டு 100க்கும் அதிகமானோர் படகு ஒன்றில் பயணித்துள்ளனர். இதன்போது, திடீரென படகு கவிழ்ந்துள்ளது.

இதனையடுத்து அதில் பயணித்தவர்கள் நீரினால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் பலரை காப்பாற்றியுள்ளனர்.

எனினும், அதில் பயணித்த 20 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading