World

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற யாக பூஜை!

டி20 உலக கோப்பை  கிரிக்கெட் தொடரில் இந்தியா வெற்றி பெற கர்நாடகாவில் ரசிகர்கள் சிலர் யாகம் வளர்த்து பூஜையில் ஈடுபட்டுள்ளனர்.
டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றில் இன்று(அக்.24) இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 
இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டி கர்நாடகாவில் ரசிகர்கள் சிலர் யாகம் வளர்த்து பூஜையில் ஈடுபட்டனர். அப்போது உலகக் கோப்பையை வெல்வோம் என்ற பதாகையை ஏந்தியப்படி பின்னணியில் ரசிகர்கள் சிலர் யாகத்தில் அமர்ந்திருந்தனர்.
மேலும் இன்றைய போட்டியைக் காண வரும் வாடிக்கையாளர்களுக்கு உணவுக் கட்டணத்தில் தள்ளுபடி வழங்குவதாக டெல்லியில் ஹோட்டல் ஒன்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading