Sports

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி!

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.5 ஓவர் முடிவில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் 43 ரன்கள் அடித்து அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஷாநவாஸ் தஹானி 6 பந்தில் 16 ரன்கள் எடுத்தார்.

இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டும், ஆவேஷ் கான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையும் படியுங்கள்: ஆசிய கோப்பை கிரிக்கெட்- இந்தியா வெற்றிக்கு 148 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான் இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது.

கே.எல்.ராகுல் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ரோகித் சர்மாவுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். கோலி பொறுப்புடன் ஆடினார். இந்த ஜோடி 49 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 12 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து விராட் கோலி 35 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து இறங்கிய ரவீந்திர ஜடேஜா நிதானமாக ஆடினார். சூர்யகுமார் யாதவ் 18 ரன்னில் அவுட்டானார். கடைசி 4 ஓவரில் வெற்றிக்கு 41 ரன்கள் தேவைப்பட்டது. 17வது ஓவரில் 9 ரன்கள் கிடைத்தது. 18வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 10 ரன்னும், 19வது ஓவரில் 3 பவுண்டரி உள்பட 14 ரன்னும் கிடைத்தது. ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா ஜோடி 50 ரன்களை கடந்து அசத்தியது. ஜடேஜா 35 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், இந்தியா 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. பாண்ட்யா 33 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading