Sports

பாகிஸ்தானை பட்தாடியது இங்கிலாந்து!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடுகிறது. இதில் முதல் ஒரு நாள் போட்டி கார்டிப்பில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு கெய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், 35.2 ஓவரில் 141 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக பக்கர் ஜமான் 47, சதாப்கான் 30 ரன் எடுத்தார். கேப்டன் பாபர் அசாம், இமாம் உல்ஹக் டக்அவுட் ஆகினர்.

இங்கிலாந்து தரப்பில், சகிப் முகமது 4, கிரேக் ஒவர்டான், பார்க்கின்சன் தலா 2 விக்கெட் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து 21.5 ஓவரில் ஒருவிக்கெட் இழப்பிற்கு 142 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆட்டம் இழக்காமல் டேவிட் மலன் 68, ஜாக் கிராலி 58 ரன் எடுத்தனர். சகிப் முகமது ஆட்டநாயகன் விருது பெற்றார். 2வது போட்டி நாளை லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது….

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading