பாடசாலைகளில் செயற்பட வேண்டிய விதம் குறித்து சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு!

பாடசாலை மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சந்தேகிக்கப்படும் மற்றும் உறுதிப்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில் செயற்பட வேண்டிய விதம் குறித்த சுகாதார வழிகாட்டல்களும் வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய பாடசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக நபரொருவர் சந்தேகப்படுமிடத்து, குறித்த நபரை பாடசாலையில் தனியான இடமொன்றில் தனிமைப்படுத்த வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், அடையாளம் காணப்படும் குறித்த நபர் மாணவராக இருக்கும் பட்சத்தில் அவர் தொடர்பில் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விடயம் தொடர்பில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிக்கும் இது தொடர்பில் அறிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளளது.
அத்துடன், பாடசாலையில் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு அனுப்பப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
